To celebrate the 25th anniversary of the installation of the Thiruvalluvar statue in the middle of the Kumari Sea, the southern tip of the South, the Thirukkural Mutrothal competitions were organized by the Tamil Nadu government at the district level.
டாக்டர் அப்துல் கலாம் பப்ளிக் பள்ளியின் வெற்றி மாணவன் :
தென் கோடி முனையான குமரிக் கடல் நடுவே திருவள்ளுவர் சிலை நிறுவி 25 ஆண்டுகள் ஆனதை கொண்டாடும் விதமாக தமிழ்நாடு அரசு சார்பாக திருக்குறள் முற்றோதல் போட்டிகள் மாவட்ட அளவில் நடத்தப்பட்டன. அதில் பரமக்குடி , டாக்டர் அப்துல் கலாம் பப்ளிக் பள்ளியின் மாணவன் க.சாய் புகழ் இனியன் (ஆறாம் வகுப்பு) பள்ளி அளவில் நடந்த போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்று பின்பு மாவட்ட அளவில் நடந்த போட்டியில் கலந்து கொண்டு 1330 திருக்குறளையும் உற்சாகத்துடன் மிகத் தெளிவாகக் கூறி மாவட்டத்திலேயே முதல் பரிசை பெற்று பள்ளிக்கு பெருமை சேர்த்து பெற்றோர்களையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தினான் .மாணவனை பள்ளியின் தாளாளர், நிர்வாக இயக்குனர், முதல்வர்கள் மற்றும் ஆசிரியர்கள் மகிழ்ச்சியுடன் பாராட்டினர்.